Manikandan August 23, 2020
PF Claim Rejected claim already settle

PF Claim has been Rejected due to Claim Already settle




Introduction :

இந்த பதிவில் நமது PF Claim ஆனது Claim Already Settled என்கின்ற குறிப்பிட்ட காரணத்தால் 
நிராகரிக்கபட்டிருந்தால் அது என்ன காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டது . இதனை எப்படி சரி செய்வது 
என்பதை இந்த பதிவில் முளுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

உங்களுக்கும் இது போன்ற குறிப்பிட்ட காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டிருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள
 வழிகளை பின்பற்றி சரி செய்துகொள்ளவும் .

Claim Rejected Reason  Error :

Claim has been Rejected due to : 1)MEMBER ACCOUNT ALREADY SETTLE IN 05/2020 2)CLAIM ALREADY SETTLE.

Reason :

மேலே குறிப்பிட்டுள்ள காரணத்திற்க்காக உங்களின்  Claim நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு காரணம் 
நீங்கள் ஏற்கனவே உங்களின் PF கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளீர்கள் ஆதலால் மறுபடியும் எடுக்க
 முடியாது என்று அர்த்தம் .

ஆனால் நீங்கள் உங்களின் பழைய நிறுவனத்தின் பணத்தை தற்போது உள்ள Member ID க்கு transfer 
செய்து அந்த பணத்தை claim செய்வதற்காகவே நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள் என்பது
 system ற்கு தெரியாது .

காரணம் நீங்கள் ஏற்கனவே Claim செய்த Claim Status  ஆனது  system ல் update ஆகாமல் பழைய status 
தற்போதும் நிலையாக இருப்பதாலேயே இதுபோன்ற claim நிராகரிக்கப்படுகிறது .

இந்த காரணத்தாலேயே ஒருவர் online ல் ஒரு முறை claim செய்தால் மறுபடியும் Claim செய்வதற்கு 
குறைந்தது 20 முதல் 30 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என அறிவுறுத்த படுகிறது .

ஆனால நாம அப்படி காத்திருக்காமல் ஒரு முறை PF Claim செய்து பணம் எடுத்த பின்னர் மறுபடியும் 
2 அல்லது 3 நாட்களுக்குள் விண்ணப்பிக்கும்போது இது போன்று நிராகரிக்கப்படும் .

இன்னும் சிலருக்கு 2 மாதங்கள் இடைவெளியில் விண்ணப்பித்தும் இது போன்று Claim நிராகரிப்பு 
ஏற்படுகிறது .

அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை கீழே பார்க்கவும் .




Solution :

மேலே குறிப்பிட்டுள்ளதை போன்று உங்களின் PF claim நிராகரிக்கப்பட்டால் நீங்கள் மறுபடியும் 
ஒரு 20 நாட்கள் கழித்து மறுபடியும் விண்ணப்பிக்கும் போது உங்களின் Claim ஏற்றுக்கொள்ளப்படும் .

ஒருவேளை உங்களின் பழைய Claim Status online ல் மாறாமல் அப்படியே இருக்கும் பற்றத்தில் 
உங்களின் Claim மறுபடியும் நிராகரிக்கப்படுவது உறுதி .

நீங்கள் இதற்க்கு முன்னர் 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மாதங்களுக்கு முன்னர் உங்களின் 
PF claim பணத்தை எடுத்திருந்து தற்போது நீங்கள் Claim செய்யும்போது உங்களின் Claim இதுபோன்ற 
காரணத்தால் நிராகரிக்கப்பட்டால் நீங்கள்  PF இணையதளத்தில்  online grievance ல் புகாரளிக்க வேண்டும் .

இவ்வாறு நீங்கள் புகாரளிக்கும் பொது உங்களின் Claim நிராகரிப்புக்கான காரணத்தையும் 
புகைப்படத்துடன் pdf வடிவத்தில் பதிவேற்றம் செய்து புகாரளிக்கும்போது உங்களின் pf employer
 உங்களின் பிரச்சனையை என்னவென்று பார்த்து அதனை அடுத்த 3 நாட்களுக்குள் சரிசெய்து தருவார் . 
இதன் பின்னர் நீங்கள் மறுபடியும் PF claim செய்யும்போது உங்களின் claim ஏற்றுக்கொள்ளப்படும் .

இந்த வழிகளை பின்பற்றினால் எளிதில் உங்களின் claim பிரச்னையை சரிசெய்ய முடியும்




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*