
How to Claim PF Advance amount in Online full details in Tamil
Introduction :
இந்த பதிவில் நமது PF கணக்கில் இருந்து நமது அவசர தேவைக்காக PF Advance Amount
யை எப்படி online claim செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Amount claim step by step procedure :
Step 1 :
முதலில் உங்களின் கணக்கினை Login செய்துகொள்ளுங்கள் அதற்க்கு உங்களின்
UAN மற்றும் அதற்காக Password யை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
captcha code யை பதிவு செய்து Login என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
Step 2:
இப்போது உங்களின் UAN யை Login செய்த பின்னர் அதில் Online Service என்கிற
தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு ஒரு 4 விதமான தேர்வுகளை தோன்றும்
அதில் Claim Form 31 ,19 &10C என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
Step 3 :
இப்போது உங்களுக்கு ஒரு புதிய பக்கம் தோன்றும் அதில் உங்களின் வங்கி கணக்கு எண் முழுவதையும் பதிவு செய்யவேண்டும் .அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் verify என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் . இப்போது உங்களுக்கு ஒரு விதிமுறைகள் காண்பிக்கப்படும் அதில் YES என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .அதன் பின்னர் அந்த பக்கத்திற்கு கீழே proceed for Online Claim என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
Step 4 :
அடுத்தது உங்களுக்கு புதிதாக தோன்றும் பக்கத்தில் I want Apply for என்கிற இடத்தில் உங்களின் claim form யை தேர்வுக்கு செய்யவேண்டும் .அதில் PF ADVANCE (FORM -31) என்பதை தேர்வு செய்யவேண்டும் . அதற்க்கு கீழே Select Service என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதில் உங்களின் Member ID தேர்வு செய்யவேண்டும் . இதன் பின்னர் Purpose for which advance is required என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதில் நீங்கள் என்ன காரணத்திற்கு இந்த Advance தொகையை எடுக்க விரும்புகிறீர்கள் என்கிற காரணத்தை தேர்வு செய்யவேண்டும் . உதாரணமாக திருமணம் ,மருத்துவ செலவு ,கல்வி கட்டணம் செலுத்த இதுபோன்ற ஏதாவது ஒரு காரணத்தை தேர்வு செய்யவேண்டும் . இதன் பின்னர் எவ்வளவு தொகை வேண்டும் என்பதை தேர்வு செய்யவேண்டும் Amount of Advance required (in Rs.) அதில் உங்களின் pf எவ்வளவு தொகை உள்ளதோ அதில் 75% வரையிலான பணத்தை நம்மால் Advance தொகையாக எடுக்க முடியும் . மேலும் இந்த தொகையானது நீங்கள் தேர்வு செய்யட்டும் காரணத்தை பொறுத்து மாறுபடும் .
Step 5 :
மேலே குறிப்பிட்ட தகவலை பதிவு செய்த பின்னர் அதற்க்கு கீழே Employee Address என்று கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியினை பதிவு செய்யவேண்டும் . அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Upload Scanned copy of cheque/passbook என்ற இடத்தில் உங்களின் வங்கியில் கொடுக்கப்பட்ட காசோலை அல்லது வங்கி passbook யை scan செய்து பதிவேற்றம் செய்யவேண்டும் . அவ்வாறு செய்தால் மாட்டிடுமே உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ள படும் என்பது குறிப்பிடத்தக்கது .
Step 6 :
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விண்ணப்பிக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்காக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் tik செய்யவேண்டும் . அதன் பின்னர் இறுதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் GET AADHAR OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் ஆதார் எண் எந்த தொலைபேசி என்னுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த எண்ணிற்கு ஒரு One Time Password ஓன்று வரும் அதனை அந்த பக்கத்தில் பதிவு செய்து verify செய்தால் பொதும் உங்களின் PF Claim submit செய்யப்படும் . இதன் பின்னர் அதிமுகப்பற்றமாக 20 நாட்களுக்குள் உங்களின் pf பணமானது உங்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் .