Manikandan September 18, 2020

SBI வாடிக்கையாளர்கள் SBI ATM களில் பணம் எடுப்பதில் புதிய விதிமுறை இன்று அமலுக்கு வருகிறது

தற்போது SBI வங்கியானது SBI ATM Machine களில் பணம் எடுப்பதில் புதிய விதிமுறையினை 
இன்று செப்டாம்பர் 18 ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது .





இதன்படி தற்போது SBI வங்கி வாடிக்கையாளர்கள் SBI வங்கி ATM களில் இனிமேல் 10,000 ரூபாய்
 அல்லது 10,000ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முற்பட்டால் உங்களின் வங்கி கணக்குடன் 
இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணினை 
ATM Machine களில் பதிவு செய்தால் மட்டுமே இனிமேல் 10,000ரூபாய்க்கு மேல் உங்களால் 
பணம் எடுக்க முடியும் என்று அறிவித்துள்ளது .

அவ்வாறு OTP எண்ணினை பதிவு செய்யமுடியாத பற்றத்தில் உங்களின் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும் .

தற்போது ATM இயந்திரங்களில் ATM கொள்ளை சம்பவம் அதிகமாக ஏற்படுவதால் அதனை 
தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக SBI தெரிவித்துள்ளது .

இந்த முறையானது எல்லா வேலை நேரத்திலும் நடை முறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த OTP முறையானது SBI ATM Machine களில் மட்டும் தற்போது நடைமுறையில் 
இருப்பதாகவும் கூடிய விரைவில் இந்த OTP முறையானது அனைத்து விதமான ATM Machine களிலும் 
நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .

SBI வாடிக்கையாளர்கள் மற்ற ATM Machine களில் பணம் எடுக்கும்போது இந்த OTP முறையானது 
செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இனிமேல் SBI வங்கி வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விரும்பினால் 
உங்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணினை கையுடன் எடுத்து 
செல்வது முக்கியம் .

மேலும் 10,000 ரூபாய்க்கு கீழ் பணம் எடுக்க எந்த ஒரு OTP ம் தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*