Manikandan September 20, 2020

How to change PF Account Fathers Name Mismatch problem with solution

Introduction :

நமது PF கணக்கில் நமது தகப்பனார் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு ஒருவருடைய பெயர் 
குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை சரி செய்யாமல் உங்களால் Claim  செய்ய முடியாது .அப்படி நீங்கள்
PF Claim செய்தால் உங்களின் PF Claim நிராகரிக்கப்படும் .


ஆதலால் முதலில் உங்களின் தகப்பனார் பெயரை சரி செய்த பின்னரே PF Claim க்கு விண்ணப்பிக்க
வேண்டும் .

Correction Producer :

ஒருவருடைய PF கணக்கில் அவருடைய தந்தை பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை 
ஆன்லைனில் வழியாக சரி
செய்ய முடியாது அதற்க்கு ஆன்லைனில் எந்த வழிகளும்
கொடுக்கப்படவில்லை .


இதனை சரி செய்வதற்கு Joint Declaration Form என்கிற படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம்
செய்து அதில் உங்களின் தகப்பனார் பெயரை சரியான பெயரையும் மற்றும் தவறாக
கொடுக்கப்பட்ட பெயரையும் குறிப்பிட்ட வேண்டும்


மேலும் உங்களின் பெயர் உங்களின் UAN உங்களின் Member ID ஆகிய தகவலை பதிவு செய்து
அதனுடன் உங்களின் ஆதார் அட்டை நகலை இணைத்து உங்களின் நிறுவனத்தின் PF ஊழியரிடம்
கையெழுத்திட்டு நிறுவனத்தின் சீல் வைத்து அந்த ஆவணத்தை உங்களின் PF அலுவலகத்தில்
சமர்ப்பிக்கவேண்டும் .


இவ்வாறு செய்வதன் மூலமாக மட்டுமே உங்களின் தகப்பனார் பெயரை மாற்றம் செய்யமுடியும் .

இதற்கான Joint Declaration Form பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள link யை Click செய்யவும் .

Joint Declaration Form :

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*