Manikandan September 27, 2020

How to Apply for Plastic Aadhar card in online simple steps




Introduction :

தற்போது நமது ஆதார் அட்டையினை பிளாஸ்டிக் வடிவில் ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம் ,இதற்க்கு முன்பு வரயில் வெறும் காகித வடிவில் மட்டுமே வழங்கப்பட்ட ஆதார் அட்டை தற்போது பிளாஸ்டிக் வடிவில் வடிவமைக்கப்பட்டு அரசே வழங்குகிறது ,

இதற்க்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

 

How to Apply Plastic Aadhar card in Online :

தற்போது நம்மில் பலரும் நமது காகித வடிவிலான ஆதார் அட்டையினை கடைகளில் கொடுத்து லேமினேசன் அல்லது பிளாஸ்டிக் வடிவில் மாற்றி பயன்படுத்தி வந்தோம் தற்போது நமது மாநில மற்றும் மத்திய அரசானது நமது காகித வடிவிலான ஆதார் அட்டையினை பிளாஸ்டிக் வடிவிலும் வழங்க முடிவெடுத்து ஆதார் இணையதளத்தில் புதிய பிளாஸ்டிக் ஆதார் அட்டை விண்ணப்பித்து வாங்குவதற்கான தேர்வுகளை தற்போது வழங்கியுள்ளது .

இந்த பிளாஸ்டிக் வடிவிலான ஆதார் அட்டையினை வாங்குவதற்கு ரூபாய் 50 கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது .

நீங்கள் விரும்பினால் காகித வடிவிலோ அல்லது பிளாஸ்டிக் வடிவிலோ ஆதார் அட்டையினை தேர்வு செய்து விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் .உங்களுக்கு ஆதார் அட்டை எந்த வடிவில் வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ள முடியும்.




Apply producer :

இப்போது எப்படி ஆன்லைன் வழியாக பிளாஸ்டிக் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம் ,

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்லவும்

https://uidai.gov.in/

அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல இணையத்தளம் காண்பிக்கப்படும் .

 

அதில் Order Aadhaar PVC Card என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்

 

இதன் பின்னர் அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல ஒரு பக்கம் தோன்றும் அதில் முதலில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் அதற்க்கு கீழே அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் captcha யை பதிவு செய்யவும் ,

 

இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணானது உங்களின் கையில் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Send OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

உங்களிடம் உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் இல்லாமல் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்யவும்.




இப்போது உங்களுக்கு உங்களின் கையில் இருக்கும் தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Send OTP என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு One Time Password ஓன்று வந்திருக்கும் அதனை அடுத்து வரும் OTP பதிவு செய்யும் பக்கத்தில் பதிவு செய்து அதற்க்கு கீழே ஒரு terms and conditions கட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் டிக் செய்துகொள்ளவும் அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் ஆதார் அட்டை விபரங்கள் காண்பிக்கப்படும் அது உங்களுடையதுதான் என்பதை உறுதி செய்ய கீழே கொடுக்கப்பட்டிருக்கு Make Payment என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது பிளாஸ்டிக் ஆதார் அட்டைக்கான கட்டணம் ரூபாய் 50யை உங்கள் ATM Card வழியாக செலுத்தவும்
இப்போது உங்களின் கட்டணம் செலுத்தும் பகுதி முடிந்ததும் உங்களின் விண்ணப்பம் நிறைவுற்றது அடுத்து உங்களின் ஆதார் அட்டையின் தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்வதற்கான SRN எண்ணானது உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை note செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் அடுத்து ஒரு 15 நாட்களுக்கு முன்னர் உங்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை உங்களின் முகவரிக்கு வந்துவிடும் .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*