
PF கணக்கின் Nominee Add செய்வதன் முக்கியத்துவம் ,
Introduction :
இந்த பதிவில் PF கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களுடைய nominator யை தேர்வு செய்வதன் முக்கியத்துவத்தை இந்த பதிவில் பார்க்கலாம் .
நாம் அனைவரும் நமது PF கணக்கில் பணத்தை சேமிப்பதிலும் அதனை எடுப்பதிலும் காட்டுகின்ற அக்கறையை யாரும் nominator யை இணைப்பதில் காட்டுவதில்லை .
நாம் எந்த ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் எவ்வளவு மாதங்கள் பணிபுரிந்திருந்தாலும் கட்டாயம் ஒரு nominator யை இணைப்பது மிகவும் அவசியமான ஓன்று .
Full details of Benefits :
நாம் ஒரு nominator யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் எதிர்பாராத விதமாக நாம் மரணமடைய நேரிட்டால் நமது pf பணத்தை எடுப்பதில் மிகப்பெரிய சிரமத்தை உங்களின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஒரு சந்தர்ப்பத்திற்கு தள்ளப்படுவார்கள் .
சில நேரகங்களில் உங்களின் பணம் உங்களின் குடும்ப உறுப்பினர்களால் எடுக்க முடியாமலே போய்விடவும் கூடம் .
உங்களின் pf கணக்கில் இருக்கும் பணமானது உங்களின் உழைப்பு என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும் .
நீங்கள் உங்களின் PF பணத்திற்கான nominee யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் எதிர்கொள்ள போகும் பிரச்சனைகள் பல உள்ளது .
உதாரணமாக உங்களின் மனைவி உங்களின் pf கணக்கின் பணத்தை எடுக்க pf அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் .ஆன்லைன் வழியாக அவரால் எடுக்க முடியாது .
அப்படி அவர் pf அலுவலகத்திற்கு செல்லும்போது அவர்கள் உங்களின் மனைவியிடம் கேக்கும் ஆவணங்கள் உங்கள் கணவரை அம்மா உயிருடன் இருந்தால் அவரிடம் கடிதம் ஓன்று எழுதி கையெழுத்திட்டு வாங்க வேண்டும் .
உங்களின் மனைவி அவர்தான் என்பதற்கு சான்றிதழ் அல்லது ஊறிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் ,
உங்களுக்கு திருமணம் ஆகாத சகோதரிகள் இருந்தால் அவர்களிடம் கடிதம் வாங்கவேண்டும் ,உங்களின் சகோதரிகள் திருமணம் ஆனவர் என்றால் அவர் திருமணம் ஆனவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் ,
இவையனைத்தும் இருந்தால் மட்டுமே உங்களின் மனைவியால் உங்களின் pf பணத்தை எடுக்க முடியும் .இவ்வளவு ஆவணங்களை அவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக அதுவும் இப்பொது இருக்கும் இந்த மோசமான உலகத்தை அவரால் எதிர்கொள்ள முடியாது ,
சிலர் தான் pf பணத்தை எடுத்து தருவதாக கூறி அவரிடம் பணம் பறிக்கவும் நினைக்கிறார்கள் ,
இவை அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம் ,நீங்கள் உயிருடன் இருக்கும்போது உங்களின் nominee யை இணைத்திருந்தால் இதுபோன்ற கஷ்டங்களை அவர்கள் எதிர்கொள்ள தேவை இல்லை .
மேலும் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும்போது ஒரு nominee யை இணைத்தால் நீங்கள் பணியில் சேர்ந்து குறைந்தது 3மாதங்கள் மட்டுமே பணிபுரிந்திருந்தாலும் போதும் உங்கள் குடும்ப உறுப்பினர்களால் நீங்கள் இறந்த பின்னர் insurance பணத்தை claim செய்ய முடியும் .இதன் மூலமாக குறைந்தது 2லட்சம் வரையில் insurance பணமானது உங்களின் குடும்பத்திற்கு கிடைக்கும் .
இதனால் உங்களின் குடும்பம் வறுமையில் தவிக்கும் ஒரு நிலைக்கு தள்ள படாமல் தர்க்க முடியும்,
எப்படி நமது PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பது என்பது பற்றிய video கீழே கொடுத்துள்ளேன் அதனை பார்த்து நீங்களும் ஒரு nominee யை இப்போதே இணைப்பது சிறந்தது .