
PF Amount withdrawal without Tax full details
Introduction :
நமது PF கணக்கில் உள்ள PF பணத்தை எந்த ஒரு tax இல்லாமல் எப்படி withdrawal செய்வது ?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF பணத்தை withdrawal செய்ய நினைக்கும் பலருக்கும் இருக்கு ஒரு சந்தேகம் நமது PF பணத்தை claim செய்தால் PF பணம் முழுவதும் கிடைக்குமா? அல்லது tax பிடித்தம் போக மீதமுள்ள பணம் மட்டும் கிடைக்குமா? என்பதுதான் ,
அதிலும் எவ்வளவு பணம் tax பிடித்தம் செய்வார்கள் .இந்த வரி பிடித்தம் என்பது எதை பொறுத்து பிடித்தம் செய்யப்படும் என்பது பற்றிய பல விதமான குழப்பங்கள் நம்மில் பலருக்கும் உள்ளது .அவை அனைத்தையும் பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Amount withdrawal with & without tax Block Diagram :
PF Amount withdrawal with tax :
உங்களுடைய PF கணக்கில் உள்ள மொத்த பணம் 50,000க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் கட்டாயம் பான் எண் மற்றும் Form15G ஆகிய இரண்டையும் இணைத்திருக்க வேண்டும் அவ்வாறு இனைக்காமல் உங்களின் PF கணக்கில் உள்ள மொத்த பணத்தை எடுக்கும் பொது உங்களின் PF கணக்கில் இருந்து 34.60% வரையில் வரி பிடித்தம் செய்யப்படும் .
மீதமுள்ள பணம் மட்டுமே உங்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் .
உங்களின் PF கணக்கில் இருந்து Advance PF Withdrawal செய்தால் எந்த ஒரு tax பிடித்தமும் இருக்காது .உங்களின் PF கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் claim செய்யும்போது tax பிடித்தம் செய்யப்படும் .
உங்களுடைய PF கணக்கில் பான் எண் மட்டும் இணைத்திருந்து Form 15G மட்டும் இணைக்க வில்லை என்றால் உங்களுக்கு 10% வரி பிடித்தம் இருக்கும் .
PF Amount Withdrawal without tax :
உங்களுடைய PF கணக்கில் உள்ள மொத்த பணத்தின் அளவு 50,000க்கும் குறைவாக இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது உங்களுக்கு .
நீங்கள் பான் எண் மற்றும் Form 15G இணைக்க வேண்டிய தேவை இல்லை .
அல்லது
உங்களின் PF கணக்கில் 50,000ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் நீங்கள் 5 வருடம் கழித்து உங்களின் PF பணத்தை எடுக்கும் போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .நீங்கள் பான் எண் மற்றும் படிவம் 15ஜி இணைத்திருக்க வேண்டிய தேவை இல்லை .
PF Amount withdrawal Above 50,000 without tax :
உங்களின் PF கணக்கில் 50,000ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் நீங்கள் 5 வருடம் கழித்து உங்களின் PF பணத்தை எடுக்கும்போது உங்களுக்கு எந்த ஒரு வரி பிடித்தமும் இருக்காது .
உங்களுடைய PF பணத்தின் அளவு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் நீங்கள் உங்களின் PF கணக்கில் பான் எண் மற்றும் Form 15G இணைத்திருக்க வேண்டும் .
அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஆன்லைனில் PF பணத்தை claim செய்த 2 நாளைக்குள் உங்களின் PF அலுவலகத்திற்கு உங்களின் claim Form 19, Form 10C மற்றும் பான் அட்டை நகல் ,Form 15G (பூர்த்தி செய்யப்பட்டது) ஆகிய ஆவணங்களை நேரில் கொண்டு கொடுக்க வேண்டும் .
அல்லது
நேரில் செல்ல முடியாதவர்கள் Register post ல் உங்களின் PF அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் .இவ்வாறு செய்யும்போது உங்களின் PF Claim Rejected ஆகாது .மேலும் உங்களுக்கு எந்த ஒரு tax பிடித்தமும் இருக்காது .
உங்களின் PF கணக்கில் பான் எண்ணினை இணைக்க முடியாதவர்கள் உங்களால் ஆன்லைனில் PF பணத்தை claim செய்யும்போது form 15G யை பதிவேற்றம் செய்ய முடியாது .
இப்படியானவர்கள் உங்களின் PF பணத்தை ஆன்லைனில் PF பணத்தை claim செய்த 2 நாளைக்குள் உங்களின் PF அலுவலகத்திற்கு உங்களின் claim Form 19, Form 10C மற்றும் பான் அட்டை நகல் ,Form 15G (பூர்த்தி செய்யப்பட்டது) ஆகிய ஆவணங்களை நேரில் கொண்டு கொடுக்க வேண்டும் .
நேரில் செல்ல முடியாதவர்கள் Register post ல் உங்களின் PF அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் .இவ்வாறு செய்யும்போது உங்களின் PF Claim Rejected ஆகாது .மேலும் உங்களுக்கு எந்த ஒரு tax பிடித்தமும் இருக்காது .
மாறாக நீங்கள் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் online ல் மட்டும் PF பணத்தை claim செய்து எந்த ஒரு ஆவணத்தையும் PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வில்லையென்றால் .உங்களுடைய PF claim நிராகரிக்கப்படலாம் .அல்லது நிராகரிக்காமல் உங்களுக்கு claim settle ஆனால் 35% வரி பிடித்தம் செய்யப்படும் .
Hi Bro, Eppadithaan En Friend Yanakku Claim pannum pothu 15 G,PAN Update pannaama Apply Pannathula 22000 Tax Pudicitanga, After Unga Mari PF Helpful Chennals Parthu Etha Therichikitten, Entha Amount Return Panna Any Option nu Yen Company la Ketta Auditor Mulama TDS Return Form File Panna Amount Return Bank ku Vanthum Sonnanga,Atha Patthi Oru Video pidunga Bro, Or Ungalala Help panna Mudintha Contact pannunga… 9965221050
bro amount return vaankalaam but yanakku atha paththi details theriyathu finance la work panra yarachum therinchavanka irunthaal kettu paarunka bro