How to update PF Account Date of Birth in online full detail in Tamil
Introduction :
இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள நமது பிறந்த தேதி, மாதம் அல்லது வருடம் இதில் ஏதாவது ஓன்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதை online ல் நம்மால் மாற்றம் செய்துகொள்ள முடியும்.
மேலும் உங்களின் பிறந்த வருடத்தில் 2 ஆண்டுகளுக்கு அதிகமான வருடங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் online ல் மாற்றம் செய்ய முடியாது.
இவை அனைத்தையும் பற்றிய தகவலை இந்த பதில் பார்க்கலாம்.
Date of Birth Correction in online :
உங்களின் PF கணக்கில் உள்ள பிறந்த தேதி அல்லது அல்லது மாதம் தவறாக இருந்தால் அதனை online ல் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் நம்மால் திருத்தம் செய்ய முடியும்.
அதே போல பிறந்த வருடத்தில் ஒரு ஆண்டு மட்டும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் உங்களால் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் உங்களின் பிறந்த வருடத்தை online ல் திருத்தம் செய்துகொள்ள முடியும்.
இது தவிர உங்களின் பிறந்த வருடத்தில் குறைந்தது 2 வருடம் அல்லது அதற்க்கு அதிகமாக தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் நீங்கள் உங்களின் பிறந்த வருடத்தை திருத்தம் செய்வதற்கு கட்டாயம் கீழ் காணும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
1.passport,
2.Education certificate,
3.Birth Certificate,
மேலே குறிப்பிட பட்டுள்ளது இந்த மூன்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வைத்து மட்டுமே உங்களால் மாற்றம் செய்ய முடியும்.
மேலும் உங்களுக்கு பிறந்த வருடத்தில் குறைந்தது 2வருடங்களுக்கு அதிகமாக உங்களின் பிறந்த வருடத்தை தவறாக பதிவிட்டிருந்தால் நீங்கள் உங்களின் பிறந்த வருடத்தை online வழியாக திருத்தம் செய்ய முடியாது.
Online ல் திருத்தம் செய்வதற்கான தேர்வுகள் இருந்தாலும் அது எந்த விதத்திலும் உங்களுக்கு பயனளிக்காது.
நீங்கள் பிறந்த வருடம் திருத்தத்திற்காண விண்ணப்பத்தினை online ல் பூர்த்தி செய்தாலும் இறுதியாக அது நிராகரிக்கவே செய்யப்படும் உங்களின் PF அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ள படாது.
உங்களின் பிறந்த தேதி மற்றும் மாதத்தில் தவறுகள் இருந்தால் நீங்கள் online ல் மிகவும் எளிதில் திருத்தம் செய்துகொள்ள முடியும்.
பலரும் அவர்களுடைய பிறந்த வருடத்தை online ல் திருத்தம் செய்ய விண்ணப்பித்துவிட்டு பிறந்த தேதி மாறும் என்ற நம்பிக்கையில் காத்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் எவ்வளவு நாள் காத்திருந்தாலும் உங்களுக்கு அதற்க்கு தீர்வு கிடைக்காது.
மாறாக நீங்கள் PF அலுவலகத்திற்க்கு சென்று உங்களின் பிறந்த வருடத்திற்க்கான ஆவணத்தை pf அலுவலரிடம் காண்பித்து திருத்தம் செய்தால் உங்களின் பிறந்த வருடத்தை எளிதில் மாற்றம் செய்ய முடியும்.
How change the DOB date in online :
முதலில் உங்களின் UAN யை Login செய்துகொள்ளுங்கள் அதன் பின்னர் Manage என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அதில் முதலாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் Basic Detail Modify என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களுக்கு உங்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கான விண்ணம் தோன்றினாள் நீங்கள் online ல் உங்களின் தகவலை திருத்தம் செய்துகொள்ள முடியும்.
மாறாக உங்களுக்கு Aadhar already Verify என்கிற தகவல் உங்களுக்கு காண்பிக்கப்பட்டால் உங்களால் உங்களின் பிறந்த தேதியை online ல் திருத்தம் செய்ய முடியாது.
அப்படி online ல் திருத்தம் செய்ய முடியாதவர்கள் pf அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உங்களின் தகவலை திருத்தம் செய்ய வேண்டும்.
இதை திருத்தம் செய்வதற்கு Joint declaration Form யை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் உங்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கான ஆவணத்தின் நகலையும் இணைத்து உங்களின் நிறுவனத்தின் ஊழியரிடம் கையப்பம் வாங்கி அந்த படிவத்தை உங்களுடைய pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி சமர்ப்பிக்கும் போது உங்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்ய நீங்கள் இணைத்திருக்கும் ஆவணத்தின் oruginal கையில் வைத்திருபது அவசியம்.
நீங்கள் உங்களின் ஆவணத்தை சமர்ப்பித்த பின்னர் குறைந்தது 30நாட்களுக்குள் உங்களின் தவறான பிறந்த தேதி திருத்தம் செய்யப்படும்.
உங்களின் பிறந்த தேதிப்பித்திருத்தம் செய்யப்பட்டதா இல்லையா என்பதை உங்களின் uan யை Login செய்து தெரிந்துகொள்ள முடியும்.
இந்த வழி முறைகளை பின்பற்றி நீங்களும் உங்களின் தகவல்களை திருத்தம் செய்துகொள்ள முடியும்.