Manikandan November 2, 2020

EPF Claim Form 10C Rejected claim form 19 not submitted




Introduction :

உங்களின் PF Claim ஆனது கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணத்திற்க்காக நிராகரிக்கபட்டால் என்ன காரணத்திற்கு நிராகரிக்கப்பட்டது? அதனை எப்படி சரி செய்வது ?என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .

 

Claim Form 10C Rejected Reason : EPFO Claim Form 10C Rejected  Claim form 19 Not submitted

 

Rejected Reason :

இதுபோன்ற குறிப்பிட்ட காரணத்திற்க்காக உங்களின் PF Claim Form 10C நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு காரணம் நீங்கள் தான் ஆமாம் .

முதலில் எந்த படிவத்தை விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் நீங்கள் நேரடியாக பென்ஷன் பணத்திற்கு விண்ணப்பித்தது தவறு.இது போன்ற தவறை பலரும் தற்போது செய்து வருகின்றனர் .

எப்போதுமே PF கணக்கில் DOE என்று கூறப்படும் Date of End உங்களின் கணக்கில் பதிவு செய்த பின்னர் நீங்கள் முதலில் Claim செய்யவேண்டிய படிவம் Form 19 அதன் பின்னரே நீங்கள் பென்ஷன் Form 10C க்கு விண்ணப்பிக்க வேண்டும் .

நீங்கள் அப்படி Form 19யை விண்ணப்பிக்காமல் நேரடியாக 10C க்கு விண்ணப்பித்தல் உங்களின் claim கட்டாயம் நிராகரிக்கப்படும் .




Solution :

எப்போது நீங்கள் உங்களின் முழு PF பணத்தை எடுப்பதற்கு விண்ணப்பித்தாலும்  முதலில் Form 19 யை விண்ணப்பிக்க வேண்டும் .அதன் பின்னர் அதன் தொடர்ச்சியாக Form 10C யை விண்ணப்பிக்க வேண்டும் .அப்படி விண்ணப்பிக்கும்போது உங்களின் PF Claim ஏற்றுக்கொள்ளபடும் .

உங்களின் PF கணக்கில் Date of End பதிவிட்ட பின்னர் நீங்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் Advance Claim Form 31 யை தேர்வு செய்து விண்ணப்பிக்க கூடாது .




 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*