PF Claim was rejected Reason for multible service overLap insufficient service
Introduction :
இந்த பதிவில் உங்களுடைய PF claim ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யவேண்டும் எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
PF Rejected reason :
1.Multible service Overlap 2.Not eligible insufficient service
மேலே குறிப்பிட்ட காரணத்திற்க்காக உங்களின் PF claim ஆனது நிராகரிக்கப்பட்டால் அதற்க்கு காரணம் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தால் உங்களால் உங்களின் PF பணத்தை எடுக்கவோ அல்லது Transfer செய்யவோ முடியாது.
எப்போதும் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து விலகிய 2மாதங்களுக்கு பின்னரே அடுத்த நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும்.
அப்படி இல்லாமல் உடனடியாக அடுத்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் இது போன்ற பிரச்சனைகள் வரலாம்.
மேலும் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனத்தில் பணி புரிந்து pf பணம் இரண்டு member id களிலும் deposit செய்யப்பட்டால் உங்களின் pf claim அல்லது Transfer கட்டாயம் நிராகரிக்கப்படும்.
Solution :
இதுபோன்ற குறிப்பிட்ட காரணத்திற்க்காக உங்களின் PF Claim Rejected செய்யப்பட்டால் இதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்றால்.
நீங்கள் ஒரே நேரத்தில் பணிபுரிந்த இரண்டு நிறுவனத்திலும் உள்ள pf department ல் உள்ள employer யிடம் letter bad வாங்கி அதனை உங்களின் தற்போதைய நிறுவனம் எந்த pf அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ அந்த அலுவலகத்தில் இந்த படிவத்தை சமர்ப்பித்து அவர்களிடம் PF Transfer படிவம் 13 யை வாங்கி அந்த படிவத்தை நிரப்பி pf அலுவலகத்தில் சமர்ப்பித்தால் உங்களின் PF பணம் எளிதில் Transfer செய்ய முடியும்.
இந்த முறையில் மட்டுமே உங்களால் உங்களுடைய pf பணத்தை Transfer செய்ய முடியும்.
நீங்கள் வாங்கு கடிதத்தில் அவர்கள் typing செய்யவேண்டியது என்னவென்றால்.
முதல் நிறுவனத்தில் நீங்கள் எந்த நாளில் இருந்து பணிபுரிய தொடங்கி எந்த நாள் வரையில் வேலை தீர்கள் என்பதை குறிப்பிட்டு இவருடைய pf பணத்தை மற்றோரு கணக்கிற்கு (2nd company)Transfer செய்வதில் எங்களுக்கு எந்த வித ஆட்சபணயும் இல்லை என அவர் typing செய்து அதில் நிறுவனத்தின் சீல் வைத்து கையப்பம் இட வேண்டும்.
இரண்டாவது நிறுவனத்தில் typing செய்ய வேண்டியவை உங்களின் பெயரை குறிப்பிட்டு அவர் எங்களின் நிறுவனத்தில் நீங்கள் பணியில் சேர்ந்த நாளை குறிப்பிட்டு இந்த நாள் முதல் பணியில் தொடர்ந்து வருகிறார் அவர் இதற்க்கு முன்னர் பணி புரிந்த நிறுவனத்தில் உள்ள pf பணத்தை எங்களின் நிறுனத்தின் member id க்கு மாற்றவிருக்கிறார் அதனை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த வித ஆட்சபணயும் இல்லை என குறிப்பிட வேண்டும். மேலும் அந்த படிவத்தில் நிறுவனத்தின் சீல் வைத்து கையப்பம் இட வேண்டும்.
இதான் பின்னர் இந்த இரண்டு படிவத்தையும் பெற்று pf அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மட்டுமே உங்களின் pf பணத்தை transfer அல்லது claim செய்ய முடியும்.