All the different type of PF Claim Form in EPFO
Introduction:
இந்த பதிவில் நமது PF கணக்கில் உள்ள பல்வேறு விதமான PF claim படிவத்தை பற்றி பார்க்கலாம். மேலும் என்னென்ன படிவங்கள் உள்ளது. அவை எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
1.Claim Form 31:
PF கணக்கில் உள்ள படிவம் 13 யை பயன்படுத்தி நமது PF கணக்கில் இருந்து அட்வான்ஸ் பணத்தை claim செய்வதற்கு இந்த படிவம் பயன்படுகிறது.
ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கும்போது அவருடைய PF கணக்கில் இருந்து அவருடைய அவசர தேவைக்கு பணம் எடுக்க விரும்பினால் படிவம் 31 யை ஆன்லைனில் பூர்த்தி செய்து claim செய்ய முடியும்.
அவருக்கு DOE தேதி பதிவு செய்யப்பட்டிருந்தால் படிவம் 31யை claim செய்ய கூடாது.
2.PF Claim Form 19 :
PF படிவம் 19யை பயன்படுத்தி நமது pf கணக்கில் இருந்து employee share மற்றும் employer share இவை இரண்டையும் நம்மால் claim செய்திட முடியும். இதனை EPF Claim என்று அழைப்பார்கள்.
படிவம் 19யை claim செய்ய வேண்டும் என்றால் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னர் உங்களுக்கு DOE தேதியை பதிவிட்டிருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே நம்மால் படிவம் 19யை claim செய்ய முடியும்.
3.PF Claim Form 10c:
PF Claim Form 10c என்பது pension பணத்தை claim செய்வதற்கான ஒரு படிவம் ஆகும்.
ஒருவர் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் 9.5 ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால் நீங்கள் படிவம் 10c யை மட்டுமே claim செய்ய முடியும்.
இந்த படிவம் 10c யை பயன்படுத்தி உங்களின் pension கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுக்க முடியும்.
4.PF Claim Form 10D:
PF Claim form 10D என்பது மாதாந்திர pension பணத்திற்கு விண்ணப்பிக்கும் ஒரு படிவம் ஆகும்.
இந்த படிவத்தை விண்ணப்பிக்க ஒருவர் ஓன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனத்தில் குறைந்தது 9.5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இந்த படிவம் 10D யை விண்ணப்பிக்க முடியும்.
9.5 வருடங்களுக்கு குறைவாக பணி புரிந்தவர்கள் படிவம் 10c யை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் 10D யை விண்ணப்பிக்க விண்ணப்பம் தாரரின் வயது 58யை எட்டி இருக்க வேண்டும் 58 வயதிற்கு பின்னரே claim செய்ய முடியும்.
5.PF Claim Form 13:
PF claim Form 13 என்பது ஒரு Transfer படிவம் ஆகும். ஒரு நபர் இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் ஒரு நிறுவனத்தில் உள்ள பணத்தை மற்றோரு நிறுவனத்திற்கு Transfer செய்வதற்கு பயன்படும் படிவம் 13யை பூர்த்தி செய்ய வேண்டும்.
படிவம் 13யை பயன்படுத்தி employee share மற்றும் employer share பணத்தை Transfer செய்ய முடியும்.
6.PF Form 15G/15H:
இந்த படிவமானது நாம் PF பணத்தை claim செய்யும்போது எந்த ஒரு வறிய பிடித்தமும் இல்லாமல் claim செய்வதற்கு கொடுக்கப்படும் படிவம் 15G /15H ஆகும்.
உங்களின் pf கணக்கில் உள்ள மொத்த பணத்தின் அளவு 50000ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் நீங்கள் pf பணத்தை claim செய்யும்போது உங்களுக்கு 34.6% வரி பிடித்தம் செய்யப்படும்.
இந்த வரி பிடித்தம் செய்யப்படாமல் இருக்க படிவம் 15G யை சமர்ப்பிக்க வேண்டும்.
7.PF Form 20:
PF claim form 20 என்பது நாமினேட்டர் ஓவர் மூலமாக pf பணத்தை எடுக்கும் முறையாகும்.
Pf கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மரணித்தால் அவருடைய pf பணத்தை அவருடைய நாமினியால் claim செய்வதற்கான படிவம் ஆகும்.
இதன் மூலமாக employee share மற்றும் employer share ல் உள்ள பணத்தை claim செய்ய முடியும்.
8.PF CLaim Form 5(IF):
Pf claim form 5(IF) என்பது இன்சூரன்ஸ் படிவம் ஆகும் pf கணக்கு வைத்திருக்கும் ஒருவர் திடீரென மரணித்தால் அவர் insurance பணம் 2இலச்சம் வரையில் claim செய்ய முடியும்.
Insurance பணத்தை claim செய்வதற்கு படிவம் 5(IF)யை claim செய்ய வேண்டும்.