Manikandan January 6, 2021




Patta Chitta Download Through Online Full Details

  (பட்டா  சிட்டா ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி)

 

Introduction :

இந்த பதிவில் பட்டா மற்றும் சிட்டா யை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

உங்களுடைய வீடு மற்றும் மற்ற இடங்களுக்கான பட்டாவை ஆன்லைன் வழியாக நீங்களே பதிவிறக்கம் செய்யமுடியும் .இதற்காக எங்கயும் அலைய தேவை இல்லை. ஒரு ரூபாய்கூட செலவில்லாமல் உங்களின் வீட்டில் இருந்தபடியே உங்களின் சொத்துக்கான பட்டாவை ஆன்லைனில் பத்திரக்கம் செய்ய முடியும் .

 

Download Patta and Chitta Procedure :

முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள Link யை Click செய்யவும் அதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் .

https://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html;jsessionid=A639FEDA4CBD8EB502E7EC30311A98E6?lan=ta

 




உங்களின் நிலத்திற்கான பட்டா அல்லது புல புகைப்படத்தை பதிவிறக்கம் செய்வதற்கு உங்களிடம் இடத்திற்கான பட்டா எண் அல்லது புல எண் இதில் ஏதாவது ஓன்று கட்டாயம் இருக்க வேண்டும் .

அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்களுடைய பட்ட அல்லது புலப்படத்தை பதிவிறக்கம் செய்ய முடியும் .
அல்லது உங்களின் பெயர் வாரியாக தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமானது ஆதாலால் கட்டாயம் பட்டா எண் அல்லது புல எண் தேவை .

முதலில் நீங்கள் பதிவிறக்கம் செய்யவிரும்பும் இடத்திற்கான மாவட்டத்தை தேர்வு செய்யவேண்டும் .அதன் பின்னர் அந்த இடமானது கிராமப்புறத்தில் உள்ள இடமா அல்லது நகர் புறத்தில் உள்ள இடமா என்பதை தேர்வு செய்யவேண்டும் .

இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் வட்டம் ,கிராமம் /நகரம் ஆகியவைகளை தேர்வு செய்யவேண்டும் .

அதன் பின்னர் பட்டா எண் அல்லது புல எண் இதில் எது தெரியுமோ அதனை தேர்வு செய்யகிவும் .




உதாரணமாக :

பட்ட எண்ணினை தேர்வு செய்கிறேன் என்றால் அதன் பட்ட எண்ணினை பதிவு செய்யவேண்டும் .அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட captcha எண்ணினை பதிவு செய்யவும் அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட சமர்ப்பி என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

இப்போது நீங்கள் சமர்ப்பித்த உடன் உங்களுக்கான பட்டா பதிவிறக்கம் ஆகும் .நீங்கள் google chrome பயன்படுத்தி பதிவிறக்கம் செய்தால் அதில் setting ல் website ல் block and redirect website என்கிற தேர்வினை enable செய்திருக்க வேண்டும் .அவ்வாறு செய்வதால் மட்டுமே உங்களுக்கான பட்டா பதிவிரம் செய்யும்போது எந்த இடையூறும் இருக்காது .

இந்த setting யை மாற்றாமல் நீங்கள் உங்களின் பட்டாவை பதிவிறக்கம் செய்ய நினைத்தால் பதிவிறக்கம் செய்ய முடியாது .

 

Part 2 :

மாறாக உங்களிடம் பட்டா எண் இல்லாமல் புல எண் மட்டும் இருந்தால் புல எண்ணினை தேர்வு செய்து அதற்கான உட்பிரிவு எண்ணினை பதிவு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*