
PF Account New KYC Update. How to Update PF Account new KYC in Online
Introduction :
தற்போது நமது PF கணக்கில் KYC Update செய்யும் பக்கத்தில் பழைய முறையை மாற்றி புதிய KYC பக்கத்தினை PF நிறுவனமானது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.
இந்த முறையில் நான்கு ஆவணக்கள் மட்டும் பதிவேற்றம் செய்வதற்கான தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் தற்போது எப்படி KYC Update செய்வது அதில் என்னேன்ன பிரச்சனைகள் உள்ளது.
இதனை பற்றிய முழு தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
NEW KYC UPDATE METHOD:
தற்போது நமது PF கணக்கில் KYC update செய்யும் பக்கத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவர பட்டுள்ளது.
தற்போதைய பக்கத்தில் இதற்க்கு முன்னர் இருந்த ஆவணங்களை விட குறைந்த ஆவங்களே பதிவேற்றம் செய்ய முடியும்.
மேலும் தற்போதைய update ல் வங்கி கணக்கினை update செய்வதில் மட்டும் சில பிரச்சனைகள் உள்ளது அவை என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.
NEW KYC Documents :
தற்போது நமது PF கணக்கில் 4ஆவணங்கள் மட்டும் பதிவேற்றம் செய்யும் படி புதிய update கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக கீழ் காணும் 3 ஆவணங்களை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும்.
1. ஆதார் எண்,
2. Pan எண்,
3. Bank Account number,
மேலே குறிப்பிட்ட இந்த மூன்று ஆவணங்களை மட்டும் kyc பக்கத்தில் பதிவேற்றம் செய்தால் போதும் உங்களின் PF பணத்தை claim செய்திட போதுமானது . Passport பதிவேற்றம் செய்ய தேவை இல்லை.
NEW KYC PROBLEM :
தற்போது நீங்கள் உங்களை UAN ல் Login செய்து உங்களின் KYC ஆவணத்தை பதிவேற்றம் அல்லது Update or Link செய்ய முயற்சித்தால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும் அவை பின்வருமாறு.
தற்போது நமது PF கணக்கில் புதிய மாற்றம் கொண்டுவர பட்டுள்ளது அதனால் தற்போது KYC ஆவணங்களை Link செய்வதிலும் சில பிரச்சனைகள் உள்ளது.
தற்போது நீங்கள் ஆதார் அட்டை மற்றும் pan எண்ணினை KYC ல் எளிதில் இன்னைத்திட முடியும்.
இதற்க்கு நீங்கள் ஆதார் என்பதை தேர்வு செய்து உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save என்பதை click செய்யவேண்டும்.அவ்வாறு செய்யும் போது உங்களின் kyc பக்கம் நீண்ட நேரம் load ஆகும் ஆனால் எந்த ஒரு இறுதி முடிவும் காட்டது.
இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது kyc ஆவணங்களின் எண்ணினை பதிவேற்றம் செய்த பின்னர் அந்த பக்கம் load ஆனா சிறிது நேரத்தில் அந்த இணையதள பக்கத்தை reload செய்யவேண்டும் அவ்வாறு செய்யும்போது ஒருசில நேரங்களில் உங்களின் UAN logout ஆகலாம் அல்லது reload மட்டும் ஆகலாம்.
இதன் பின்னர் உங்களின் ஆதார் எண் ஆனது உங்களின் KYC பக்கத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
இதேபோல pan card யையும் உங்களால் இணைக்க முடியும்.
Bank Account Link in KYC :
ஆனால் நமது KYC பக்கத்தில் வங்கி கணக்கை இன்னைக்கும்போது மட்டும் சில பிரச்சனைகள் தற்போது ஏற்படுகிறது.
தற்போது 18/01/2021 கொடுக்கப்பட்ட kyc update இன்னும் முழுமைடையாத காரணத்தால் தற்போது மட்டும் இந்த பிரச்சனை வரலாம்.
அதாவது வங்கி கணக்கை நீங்கள் உங்களின் kyc பக்கத்தில் இணைக்க உங்களின் வங்கி கணக்கு எண் மட்டும் IFSC எண் ஆகியவைகளை பதிவிட்டு save செய்யும்போது உங்களுக்கு வங்கி கணக்கு link ஆகாது.
மாறாக load ஆகிக்கொண்டே இருக்கும்.
அதுமட்டும் இல்லாமல் தற்போதைய update படி நீங்கள் KYC ல் வங்கி கணக்கில் இணைக்கவேண்டும் என்றால் உங்களின் ஆதார் எண்ணிற்கு ஒரு OTP ஓன்று அனுப்பப்படும் அதனை பதிவு செய்தால் மட்டுமே வங்கி கணக்கு உங்களின் kyc பக்கத்தில் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஆனால் தற்போது அப்படி எந்த ஒரு OTP ம் அப்படி வருவதில்லை. தற்போதைய நிலையில் இந்த பிரச்சனைகள் உள்ளது.
தற்போது வங்கி கணக்கை தவிர மற்ற மூன்று ஆவணங்களை உங்களால் எளிதில் kyc பக்கத்தில் இணைக்க முடியும்.
KYC DOCUMENTS AUTOMATIC Rejected :
தற்போதைய Update ன் படி இனி வரும் காலங்களில் நீங்கள் உங்களின் KYC ஆவணங்களை உங்களின் UAN உடன் இணைத்து அடுத்து வரும் 60 நாட்களுக்குள் உங்களின் employer approved செய்யவேண்டும்.
அவ்வாறு உங்களுடைய employer Update செய்யாமல் pending ல் இருக்கும் பற்றத்தில் உங்களின் pf kyc automatic முறையில் நிராகரிக்கப்படும்.
இதற்க்கு முன்பு வரையில் இவ்வாறு கிடையாது.உங்களின் employer Approved செய்யாமல் இருந்தால் எவ்வளவு நாட்கள் கழித்து பார்த்தாலும் உங்களின் KYC ஆவணம் pending ல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் ஆதார் அட்டை மட்டும் pan எண்ணினை kyc ல் எளிதில் இணைக்க முடியும்.
Thank you for your new updated
Thanks for your support