
PF Interest Credited successfully on 2019 to 2020 Financial year
Introduction :
நமது PF சந்தாதாரர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 2019 மற்றும் 2020 க்கான வட்டிவிகிதம் தற்போது அனைவரின் PF கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது .
வெகு நீண்டகாலமாக 2019 TO 2020 இந்த நிதியாண்டிற்க்கான வட்டிவிகிதம் நமது PF கணக்கில் வரவு வைக்கப்படமல் தற்போது ஏற்பட்டுள்ள கொரோன நோய் தொற்றின் காரணமாக நிலுவையில் இருந்து வந்தது .தற்ப்போது இந்த வட்டிவிகிதமானது நமது PF கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது .
இதனை எப்படி தெரிந்துகொள்வது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
How to check your PF Interest Credit :
நமது PF கணக்கில் வட்டிவிகிதம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முதலில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள Link யை click செய்யவும்.
https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login
இதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல ஒரு பக்கம் தோன்றும்
அதன் பின்னர் உங்களின் UAN மற்றும் Password யை பதிவு செய்யவும் அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்ட கணக்கிற்க்கான விடையினை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Login என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் member ID தேர்வு செய்யவும் அதன் பின்னர்
இதன் பின்னர் Old Passbook என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்
இப்போது உங்களின் passbook காண்பிக்கப்படும் அதில் முதலாவதாக Int என்று credit செய்யப்பட்டிருக்கும் .அதுதான் PF கணக்கிற்கான வட்டி .
உங்களின் கணக்கில் வட்டியானது Employee Share Employer Share இந்த இரண்டில் மட்டுமே credit செய்யப்படும் .பென்ஷன் பணத்தில் வட்டி கிரெடிட் செய்யப்படாது .