Manikandan February 14, 2021




இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது கட்டாய Fast Tag முறை

Introduction :

இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதுமுள்ள சுங்க சாவடிகளில் நடைமுறைக்கு வருகிறது கட்டாய Fast tag முறை .

Full News :

நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்க சாவடிகளில் வாகனகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்தது . இந்த கட்டணத்தை ஒருவர் பின் ஒருவராக செலுத்தும் முறையானது ஏற்கனவே நடை முறையில் இருந்து வந்தது .

இந்த செயல் முறையால் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றவண்ணம் உள்ளது.இதனால் குறித்த நேரத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வது மிகவும் சவாலாக இருந்தது .

இதனை தவிர்த்து உடனடியாக சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வகையில் சுங்க சாவடி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் புதிய முறையானது கடந்த 2020ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது .




இதன் படி அனைத்து வாகனங்களுக்கும் Fast tag முறையானது அறிமுகப்படுத்த பட்டது .இதனால் சுங்க சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்தப்படும் .உங்களின் 4சக்கர வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது உங்களின் வாகனங்களுக்கான கட்டணம் உங்களின் Fast tag இருந்து தானாக செலுத்தப்பட்டுவிடும் .

இதனால் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவை இருக்காது .

இந்த Fast tag முறையானது தற்போது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இன்று 14/02/2020 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது .

இதன் பின்னர் Fast tag இல்லாமல் சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு 2மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது .




Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*