
Muthoot finance Loan App full Review and online interest pay full details
Introduction :
நம்மில் பலரும் Muthoot Finance என்கிற நிறுவனத்தில் பலரும் நகை கடன் வைத்திருப்போம் அந்த கடனுக்கான வட்டி (Interest )யை செலுத்துவதற்காக நாம் ஒவ்வொருவரும் ஒரு ஒரு மாதமும் muthoot Finance Branch யை நேரடியாக சென்று செலுத்தி வருகிறோம் .
இதனை நாம் online வழியாக நமது வீட்டில் இருந்தே படியே நம்மால் செலுத்த முடியும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை .
இதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
How to check My Loan and Interest Amount :
நீங்கள் உங்களின் வீட்டில் இருந்து கொண்டே உங்களின் மற்றோரு வங்கியில் பணம் இருந்தால் அதில் இருந்து பணத்தை muthoot Finance நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்த முடியும் .
இதற்க்கு நீங்கள் முதலில் கீழே கொடுக்கப்பட்ட Application யை உங்களின் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து Install செய்துகொள்ளவும் .
Application Download :
இப்போது Application யை Install செய்த பின்னர் அந்த application Open செய்து Register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .அதன் பின்னர் வரும் புதிய பக்கத்தில் New Register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் கணக்கினை துவங்குவதற்கான Registration பக்கத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
இதற்க்கு முதலில் உங்களின் பெயர் உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் muthoot Finance ல் நகை கடன் வாங்கும் பொது கொடுத்த தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும் .
இதன் பின்னர் இந்த Application யை Login செய்வதற்கான User name மற்றும் Password யை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்ட Terms and Condition யை டிக் செய்து விட்டு கீழே கொடுக்கபட்டுள்ள Register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் இப்போது உங்களின் கணக்கு Register செய்யப்படும் .
Application Login :
இதன் பின்னர் உங்களின் User Name மற்றும் Password யை பதிவு செய்து Login செய்துகொள்ளவும் .
இப்போது உங்களின் Application ல் உங்களின் நகை கடன் பற்றிய முழு தகவலை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும் .
இதற்க்கு அந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள My Loan என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .இப்போது உங்களுக்கு தற்போது உள்ள நகை கடன் முழுவது உங்களுக்கு காண்பிக்கப்படும் .
அதில் உங்களுக்கான வட்டியை தெரிந்துகொள்ள எந்த கடனுக்கான வட்டியை தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த கடன் தொகையை click செய்யவும் .இப்போது இப்போது அந்த கடனுக்கான வட்டி அந்த கடன் தொகைக்கு கீழே காண்பிக்கப்படும் .
மேலும் இந்த கடனை நீங்கள் மொத்தமாக செலுத்த விரும்பினாலும் அல்லது கடனில் ஒரு பகுதியை மட்டும் செலுத்த விரும்பினாலோ அந்த பணத்தை உங்களின் ATM அட்டை அல்லது பிற online செயலிகள் gpay, paytm போன்ற Application மூலமாகவும் செலுத்த முடியும் .
இந்த Application மூலமாக நீங்கள் உங்களின் தற்போதைய கடன் நிலவரம் ,அடுத்த மாத்திற்க்கான வட்டி விகிதம் நிலுவையில் உள்ள கடன் தொகை அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் .
இந்த application யை பயன்படுத்தி உங்களின் வட்டி தொகையை உங்களின் வீடுகளில் இருந்து நீங்களே செலுத்தலாம் இதனால் உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் மிச்சம் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்