Manikandan May 27, 2021




PF Death Claim Insurance Amount was Increased 2.5Lak Up to 7lak

Introduction :

EPFO சந்தாதாரர்களுக்கு வழங்கபடும் insurance பணத்தின் அளவினை தற்போது மத்திய அரசு அதிகப்படுத்தியுள்ளது .மேலும் இந்த insurance பணத்தை எப்படி எடுப்பது குறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

PF Death Claim Insurance Amount was Increased :

 

தற்போது EPFO சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்த insurance Form 5IF ன் பணத்தின் அளவை தற்போது மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது .

இதற்க்கு முன்னர் வரையில் PF Death Claim Insurance படிவத்தின் மூலமாக இறந்துபோன ஒருவரால் குறைந்த பற்றமாக 2லட்சம் முதல் அதிகப்பற்றமாக 6லட்சமாக இருந்தது .தற்போது இந்த பணத்தின் அளவானது குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7லட்சம் வரையில் நம்மால் Claim செய்ய முடியும் .




How to PF  Claim Death Insurance Form :

எந்த ஒரு தனி நபரும் ஏதாவது ஒரு தனியார் மற்றும் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அவர்களுக்கு PF பணப்பிடித்தம் செய்யப்படுமாயின் நிச்சயம் அவர் பணியில் இருக்கும்போது ஏதாவது ஒரு காரணத்தால் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தார் இந்த insurance பணத்தினை Claim செய்துகொள்ள முடியும் .

 

EPFO Death Claim Procedure :

இப்போது PF Death Claim எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .நாம் எந்த ஒரு தனியார் நிறுவனத்தில் அல்லது அரசு நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் உங்களுக்கு PF பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும் .

அதன் பின்னர் உங்களின் UAN யை Activation செய்வது அவசியம் அதே போன்று உங்களுக்கான nominee யார் என்பதையும் பதிவு செய்திருக்க வேண்டும் அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே நீங்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் உங்களின் PF பணத்தை உங்களின் குடும்பத்தாரால் எடுக்க எளிமையாக இருக்கும் .

இதன் பின்னர் உங்களின் UAN ஆதார் ,பான் எண் வாங்கி கணக்கு எண் ஆகியவைகளை இணைத்திருக்க வேண்டும் .

இப்போது நாம் எந்த ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கும் தருணத்தில் நாம் ஏதாவது ஒரு நோயால் அல்லது ஏதாவது விபத்தினாலோ அல்லது கொரோனா நோயால் இறந்தாலும் கூட நமது குடும்பத்தாரால் நமது PF பணம் முழுவதையும் எடுக்க முடியும் மேலும் Insurance Form 5IF ஆகிய படிவங்களை Claim செய்ய முடியும் .




Require Documents :

இப்போது நாம் இறக்க நேரிட்டால் நமது PF பணத்தை Claim செய்வதற்கு நீங்கள் யாரை Nominee ஆக தேர்வு செய்தீர்களோ அவர்களின்

1.Aadhar Card 

2.Pan card

3.Bank Pass Book or Cheque Leaf

4.Death Certificate,

5.Certificate of Succession(வாரிசு சான்றிதழ் )

இவை அனைத்தையும் உங்களின் PF அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் .

PF Claim Form 20,10D,5IF:

உங்களின் PF லுவலகத்திற்கு சென்று அங்கு Form 20,Form 10D மற்றும் Insurance Form 5IF ஆகிய படிவங்களை வாங்கி அவைகளை பூர்த்தி செய்து அதனுடன் உங்களின் ஆதார் அட்டை நகல் ,பான் அட்டை நகல் ,வங்கி பாஸ்புக் நகல் ,இறப்பு சான்றிதழ் ,வாரிசு சான்றிதழ் ஆகிய படிவங்களை இணைத்து உங்களின் PF அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .

அவ்வாறு செய்யும் போது உங்களின் PF பணமானது அடுத்த 15 முதல் அதிகப்பற்றமாக 45 நாட்களுக்குள் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் .

ஆன்லைனில் Death Login சரியாக வேலை செய்யாததால் நேரடியாக உங்களின் PF அலுவகளத்திற்கு சென்று நேரடியாக சமர்ப்பிப்பது சிறந்தது .





Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*