PF Claim was Rejected Reason Claim Already Settled Full detils on Tamil
Introduction :
இந்த பதிவில் நமது PF Claim ஆனது ( Rejected )நிராகரிக்க பட்டால் அது எதனால் நிரகரிக்க பட்டது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அந்த தவறுகளை திருத்தி மறுபடியும் PF Claim க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பதிவில் நாம் பாக்க விருக்கும் முக்கியமான பிரச்சனை PF Claim செய்து claim status settled என வந்த பின்னரும் பணம் அவருடைய வங்கி கணக்கில் வரவில்லை எனில் என்ன நடவடிக்கைகளை நாம் கையாளவேண்டும் என்பதை பார்க்கலாம்.
PF Claim Rejected Reason:
Reason of claim Rejected :Claim Already settled
இந்த நபருக்கு pf பணம் claim செய்து எந்த பணமும் அவருடைய வங்கி கணக்கிருக்கு வரவில்லை.
அவர் மறுபடியும் online வழியாக PF claim செய்யும்போது அவருடைய PF Claim ஆனது Rejected செய்யப்பட்டுவிட்டது.
Solution :
நீங்கள் pf claim செய்தாள் உங்களின் pf பணமானது உங்களின் வங்கி கணக்கிற்கு வருவதற்கு குறைந்தது 15 முதல் அதிகபற்றமாக 45நாட்களுக்குள் ஆகும்.
நீங்கள் claim செய்த பின்னர் தொடர்ந்து உங்களுடைய PF claim Status யை கண்காணிக்க வேண்டும்.
உங்களின் PF Claim status settled என வந்ததும் அன்றில் இருந்து 4 வேலை நாட்களுக்குள் உங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
அவ்வாறு வரவு வைக்காத நிலையில் நீங்கள் அதிக பற்றமாக 8 முதல் 12 நாட்கள் வரை காத்திருந்து பார்க்கலாம். அப்படியும் உங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்றால் நீங்கள் EPFO Website மூலமாக புகாராளிக்க வேண்டும்.
அதற்க்கு Grievance என்கிற ஒரு வழி உள்ளது.அதன் மூலமாக PF அலுவலகத்தின் மேல் புகாராளிக்க வேண்டும்.
அவ்வாறு புகாரளிக்கும்போது உங்களின் புகாரை சரிபார்த்து அதன் பின்னர் மின்னஞ்சல் முகவரிக்கு பதில் மின்னஞ்சல் அனுப்புவார்கள். அதில் அவர் கூறும் வழிகளை பின்பற்றி சரி செய்ய முடியும்.
இப்போது உங்களின் PF அலுவலக தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை உங்களுக்கு வழங்குவார்கள்.
உதாரணமாக :
கீழே கொடுக்கப்பட்ட படத்தை பார்க்கவும்.
நீங்கள் உங்களின் PF பணத்தை பெற அவர்கள் கூறும் வழியை பின்பற்றுவதன் மூலமாக உங்களின் பணத்தை பெற முடியும்.
இப்போது அவர்கள் பதிலளித்த மின்னஞ்சலில் கூறியதாவது.
நீங்கள் மறுபடியும் ONLINE வழியாக உங்களின் PF பணத்தை பெற விண்ணப்பிக்கவும்.
ONLINE வழியாக விண்ணப்பித்த பின்னர் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அவர்களிடம் நடந்தவைகளை கூற வேண்டும்.
நான் ஏற்கனவே claim செய்தேன் ஆனால் எனக்கு எந்த ஒரு பணமும் யனது வங்கி கணக்கிற்கு வரவில்லை ஆதலால் EPFO website மூலமாக grievance ல் புகார் தெரிவித்துள்ளேன்.
அவர்கள் மறுபடியும் pf பணத்திற்கு விண்ணப்பிக்கும் படியும் விண்ணப்பித்த பின்னர் உங்களிடம் அதை தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்கள்.மேலும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் எண்ணினை அவர்களிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலமாக மறுமுறை நீங்கள் விண்ணப்பித்த PF Claim நிராகரிக்க படாமல் உங்களின் PF Claim settled செய்யப்படும்.
மாறாக நீங்கள் உங்களின் PF அலுவலகத்தை தொடர்புகொள்ளாமல் PF Claim-யை online வழியாக சமர்ப்பித்தால் கட்டாயம் அது நிராகரிக்கப்பிடும் என்பது உறுதி.
உங்களின் PF பணம் Claim செய்த பின்னர் இது போன்று உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் வராமல் இருந்தால் online வழியாக grievance ல் புகார் தெரிவிக்க வேண்டும்.